சென்னை: லயோலா கல்லுாரியின், மறைந்த முன்னாள் முதல்வர் மர்பி நினைவாக 'மர்பி கால்பந்து' போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு, 22வது நினைவு கோப்பைக்கான கால்பந்து போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்தது; 16 அணிகள் பங்கேற்றன.
லயோலா ஒயிட்ஸ், கிறிஸ்ட், பிரசிடென்சி மற்றும் திருச்சி பிஷப் ஹூபர் ஆகிய நான்கு அணிகள், அரை இறுதியில் சந்தித்தன.
இதில், கிறிஸ்ட் கல்லுாரி அணியை வீழ்த்திய லயோலா கல்லுாரி அணியும், திருச்சி பிஷப் ஹூபர் அணியை தோற்கடித்த சென்னை பிரசிடென்சி அணியும் இறுதியில் மோதின.
இந்த போட்டியில் மோதிய பிரசிடென்சி, லயோலா ஆகிய இரு அணிகளும், சம பலம் வாய்ந்தவை என்பதால், ஆட்டத்தின் கடைசி நொடி வரை பரபரப்பு, பதற்றம் நிலவியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2 - -2 என்ற கோல் கணக்கில் சம நிலை வகித்தன.
இதனால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட, அதில் இரு அணி வீரர்களும் தற்காப்பு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால், கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க 'டை பிரேக்கர்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 7 - -6 என்ற கோல் கணக்கில், லயோலா கல்லுாரி வெற்றி பெற்று, ஆறு ஆண்டுகளுக்கு பின், மர்பி கோப்பையை மீண்டும் வென்று சாதித்தது.