உடுமலை:உடுமலை, அரசு கலைக்கல்லுாரியில் நிலத்தடி நீர் செறிவூட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சியில், கோவை நிலநீர் மேம்பாட்டு துறை பொறியாளர் கீதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, தடுப்பணை அமைப்பது, நிலத்தடி நீர் சேமிப்பு குறித்து, நிலநீர் மேம்பாட்டுத்துறை செயற்பொறியாளர் புவனேஸ்வரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து மாணவர்கள், நிலத்தடிநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உட்பட 200க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
Advertisement