திருக்கனுார், : மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், திருக்கனுாரில் நடந்தது.
மண்டல பொறுப்பாளர் கண்ணன், தலைவர் வேதாச்சலம் தலைமை தாங்கினர். தொகுதி பொதுச் செயலாளர் முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில், அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசுகையில், 'தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றோம்.
மண்ணாடிப்பட்டு பின்தங்கிய தொகுதியாக இருந்தது. அதனை மாற்றி, நிதி ஒதுக்கி ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.
சாலை, குடிநீர் வசதிகளாக இருந்தாலும், மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்களாக இருந்தாலும் உடனுக்குடன் தொகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டும்.
எல்லா திட்டங்களையும் நமது தொகுதிக்கு கொண்டு வர வேண்டும் என்பது எனது எண்ணம். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதற்கு நன்றி.
இலவச மனைப்பட்டா விரைவில் வழங்க உள்ளோம். எந்தெந்த பகுதிகளில் மனைப்பட்டா கொடுக்கப்படாமல் இருக்கிறதோ அந்த பகுதிகளில் தகுதியானவர்களுக்கு மனைப்பட்ட வழங்க இருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்' என்றார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் அனந்தன், மாவட்ட பொது செயலாளர் திருவேங்கடம், நிர்வாகிகள் வீரராகவன், தமிழ்மணி, செல்வகுமார், சையது, சீனுவாசமூர்த்தி, கலியபெருமாள், போட்டோ ராஜா, சோம்பட்டு சிவா உட்பட பலர் பங்கேற்றனர். மகளிர் அணி நிர்வாகி அனுசுவை நன்றி கூறினார்.