புதுச்சேரி, : புதுச்சேரி மாநில செகோ-காய் கராத்தே சங்கம் சார்பில் ஒருநாள் கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது.
உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த பயிற்சி முகாமை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, 'உடல், மன ஆரோக்கியத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து அறநெறியோடு பயணிக்க வேண்டும்' என, அறிவுரை வழங்கினார்.
இந்தியன் செகோ-காய் தலைவர் பாரத்சர்மா, தமிழ்நாடு கராத்தே சங்க செயலார் அல்தாப் ஆலம், தென்னிந்திய கராத்தே சங்க தலைவர் அன்சி ஜேக்கப் முன்னிலை வகித்தனர். இதில், புதுச்சேரியில் உள்ள தலைமை கராத்தே பயிற்சியாளர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை செகோ-காய் தலைவர் பழனிவேல் செய்திருந்தார்.