கிள்ளை, மாசிமக தீர்த்தவாரிக்கு, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி, நாளை 7ம் தேதி கிள்ளை முழுக்குதுறை கடற்கரைக்கு வருகை தருகிறார்.
கிள்ளை முழுக்குத்துறை கடற்கரையில், மாசி மகத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி கிள்ளைக்கு வரும்போது, சிதம்பரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட சுவாமிகள், டிராக்டரில் அலங்கரித்து கொண்டு வரப்பட்டு, முழுக்குத்துறை கடற்கரையில், தீர்த்தவாரி நிகழ்ச்சியில், பங்கேற்கும். அப்போது, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடலில், நீராடி செல்வது வழக்கம்.
இந்தாண்டு, மாசிமக தீர்த்தவாரிக்கு, ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி, கிள்ளை முழுக்குத்துறை கடற்கரைக்கு நாளை 7ம் தேதி வருகை தருகிறார்.
அப்போது, கிள்ளை தைக்கால் தர்காவில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, பூவராக சுவாமிக்கு,முஸ்லீம்கள் வரவேற்பு கொடுக்கின்றனர். மாலை 6 மணிக்கு, கிள்ளை பூவராக சுவாமி மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனமும், நடக்கிறது.
தீர்த்தவாரியை முன்னிட்டு, கிள்ளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், சாலை வசதி, தெரு மின் விளக்கு, குடிநீர் வசதி, மற்றும் தற்காலிக கழிவரை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இரவு 7 மணிக்கு, ஆந்தகுடி இளையராஜாவின், கிராமிய தெம்மாங்கு நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை, துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன், செய்து வருகிறார்.