பட்டாபிராம்: பட்டாபிராம், தண்டரை, பள்ளத்தெருவில் 3,000க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பத்தினர் உள்ளனர்.
இப்பகுதியில், மத போதகர் பிரகாஷ் என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து 'தேவனுடைய வீடு' என்ற பெயரில் தேவாலயம் அமைத்துள்ளார்.
உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட இந்த தேவாலயத்தில், நேற்று மாலை வழிபாட்டு கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து முன்னணி அமைப்பு சார்பாக 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டாபிராம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அனைவரையும் கலைத்தனர்.