கடலுார், : முன்விரோத தகராறில், தி.மு.க., பிரமுகரை கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், துாக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் மதியழகன், 40; தி.மு.க., பிரமுகர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். அ.தி.மு.க.,பிரமுகர். இவரது மனைவி கலைச்செல்வி. ஊராட்சித் தலைவர்.
மதியழகன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு அதே பகுதியில் உள்ள அறநிலையத் துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோவிலை நிர்வகிப்பது மற்றும் ஊராட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இதன் காரணமாக ராமச்சந்திரன் உட்பட 4 பேர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மதியழகனை கத்தியால் வெட்டியும், இரும்பு பைப்பால் தாக்கினர். இதில், காயமடைந்த அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து பள்ளிப்பட்டு சீத்தாபதி, 58; பார்த்திபன், 42; தினகரன், 48; ஆகியோரை கைது செய்தனர்.
ராமச்சந்திரனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.