கடலுார் : கடலுார் அருகே பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில், உடல் கருகி பெண் பரிதாபமாகஇறந்தார். தீக்காயமடைந்த 9 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் அடுத்த மணவெளியை சேர்ந்தவர் சேகர் மனைவிகோசலை, 48; இவர், கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அடுத்த சிவனார்புரத்தில் தென்னந்தோப்பில் 'கோசலை பயர் ஒர்க்ஸ்' என்ற பெயரில் கூரை கொட்டகையில் பட்டாசு குடோன்நடத்தி வருகிறார்.
இங்கு, உரிமையாளர் கோசலை, சிவனார்புரத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி பிருந்தா தேவி, 35;புதுச்சேரி தவளக்குப்பம் செல்வம் மகள் செவ்வந்தி, 19; பாக்கம் கூட்டுரோடு ராஜேந்திரன் மகள்அம்பிகா, 18; அரியாங்குப்பம் பூபாலன் மனைவி மல்லிகா, 60; ஓடைவௌி அய்யனார்மனைவி சுமதி, 41; உட்பட 10 பேர் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில்ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாலை 4:30 மணிக்கு பட்டாசு குடோன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துசிதறியதால், கட்டடம் தரை மட்டமானது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் காணப்பட்டது. குடோனில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த விபத்தில் மல்லிகா உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். தீக்காயமடைந்த பிருந்தா,அம்பிகா, செவ்வந்தி, லட்சுமி, சுமதி உள்ளிட்ட 5 பேர் கடலுார் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோசலை உள்ளிட்ட 4 பேருக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் தென்னை மட்டைகள், தேங்காய், வாழை மரங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. புதுச்சேரி மற்றும் கடலுார் எல்லையில் உள்ள 5 கி.மீ., துாரத்திற்கு வெடி சத்தம்கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.நல்லவாடு பகுதியில் தொகுப்பு வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.குடோன் அருகில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் உடைந்து சேதமானது.
சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
கடலுார் மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார், மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரிஆறுமுகம், நிலைய அலுவலர் விஜயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, எஸ்.பி., ராஜாராம், டி.எஸ்.பி.,கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர்கள் தேவேந்திரன், குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தீ விபத்தில் காயமடைந்து கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அம்பிகாஉள்ளிட்ட 5 பேரை கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ., சந்தித்துஆறுதல் கூறினர்.காயமடைந்தவர்களுக்கு தேவையானமருத்துவ உதவிகளை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.
தீ விபத்தில் காயமடைந்து கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அம்பிகாஉள்ளிட்ட 5 பேரை கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ., சந்தித்துஆறுதல் கூறினர்.காயமடைந்தவர்களுக்கு தேவையானமருத்துவ உதவிகளை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.