விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 44; விவசாயி. இவரது பராமரிப்பில் தந்தை ஜெயராமன் உள்ளார்.
தட்சணாமூர்த்தியின் சகோதரர்கள் தனசேகர், அய்யப்பன் மற்றும் அவரது தங்கை கணவர் தனசேகர் உள்ளிட்டோர், ஜெயராமன் பெயரில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை, பாகம் பிரித்து தரும்படி கேட்டுள்ளனர்.
இதற்கு, தந்தை இறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தட்சணாமூர்த்தி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.
நேற்று தட்சணாமூர்த்தி, அவரது மனைவி சரஸ்வதி இருவரும் பைக்கில் சென்றபோது, மாம்பழப்பட்டு முத்தாலம்மன் கோவில் அருகே சகோதரர் தனசேகர் மற்றும் அய்யப்பன் உள்ளிட்டோர் மறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து, சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், தனசேகர், அய்யப்பன் உட்பட 3 பேர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.