காரைக்குடி : காரைக்குடி நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் சிவதாஸ்மீனா நேற்று ஆய்வு செய்தார்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், எரிவாயு தகன மேடை, அடர்வனக் காடுகள், அறிவுசார் மைய கட்டடப் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில், இணை இயக்குனர் விஜயகுமார், மண்டல இயக்குனர் சரவணன், மண்டல பொறியாளர் மனோகரன், நகராட்சி ஆணையர் லட்சுமணன், நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.