சோழவந்தான் : விக்கிரமங்கலம் அருகே நாகமலை அடிவாரம் வீமலிங்கேஸ்வரர் கோயிலில் வள்ளலார் 59 ஆண்டு பூசவிழா, 152வது வடலூர் பூச ஜோதி நடந்தது. இதில் அகவல் பாராயணம் பாடி, சன்மார்க்க கொடியேற்றினர். தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை நடந்தது. மதுரை நேதாஜி சுவாமிநாதன் 'நேதாஜியின் சமத்துவமும் வள்ளலாரின் சன்மார்க்கமும்' எனும் தலைப்பிலும், அனுப்பானடி பெருமாள் 'சன்மார்க்க நெறி' எனும் தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர்.
பள்ளி மாணவர்கள் அருட்பா பாடல் பாடினர். அன்னதானம் வழங்கப்பட்டது. வீமய்யா குடும்பத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதில் 60ம் ஆண்டு விழாவையொட்டி சுற்றுவட்டார பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம், கிராம மக்களிடம் கொல்லாமை, பசியாற உணவு, அடுத்தவருக்கு உதவும் வாழ்க்கை போன்ற சன்மார்க்க நெறிகளை பரப்புரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானித்தனர்.