இந்தியாவில் 'ஏஎச்3என்2' காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது. சிலருக்கு மூச்சுத் திணறல், நிமோனியா தாக்கக் கூடும். பலருக்கு மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படக்கூடும். மொத்தத்தில் இப்போது ஏற்பட்டுள்ள சூழலை எச்சரிக்கை, விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும்.
- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்
சமூக வலைதளத்தில் உலாவந்த வட மாநில தொழிலாளர் பிரச்னை தற்போது தேசிய பிரச்னையாகியுள்ளது. தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து அண்ணாமலை தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் கேள்விகளுக்கு விளக்கம் சொல்லாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. வழக்கை ரத்து செய்க.
- கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் தலைவர்
பரமக்குடி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தொடர்ச்சியாக கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தை மீதான இக்கொடூரத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
- பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநில செயலர்