வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குஜராத்தில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தினை பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அப்லாபானிசும், ஒன்றாக ரசித்து பார்க்க இருக்கின்றனர்.
அரசு முறைப்பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அப்லாபானிஸ் தனது நாட்டு வர்த்தககுழுவுடன் இந்த வாரம் இந்தியா வருகை தருகிறார். அப்போது பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார்.
![]()
|
இந்நிலையில் மார்ச்.8-ம் தேதி குஜராத் செல்லும் ஆஸ்திரேலிய பிரதமர் அங்கு ஹோலி பண்டிகையை கொண்டாட உள்ளார். அவருடன் பிரதமர் மோடியும் கொண்டாடுகிறார். அடுத்தநாள் (மாரச்09) தேதி குஜராத்தின் ஆமதாபாத் நகரில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதன் முதல் நாள் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமரும், பிரதமர் மோடியும் ஒன்றாக பார்வையிட உள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement