காருக்கான மாத தவனை கட்டத் தவறினால், காரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை ஃபோர்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கார்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கார்களின் தேவை இருக்கிறதோ இல்லையோ.. பெரும்பாலான நடுத்தர மக்களும் தங்களின் அந்தஸ்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு கடன் வாங்கியாவது ஒரு காரை வாங்கிவிடுகிறார்கள். ஆனால், காரை வாங்கிவிட்டு ஒழுங்காக மாத தவணை கட்டாவிட்டால் எளிதாக காரை சீஸ் செய்வதற்கு வசதியாக கடன் வழங்கும் ஒவ்வொறு நிறுவனங்களும் காரின் ஸ்பேர் சாவியை தங்கள் வசம் வைத்துக் கொள்வார்கள்.
![]()
|
ஆனால் தற்போது வெளிவரும் பெரும்பாலான கார்கள் ஸ்மார்ட் அம்சங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளன. காரை ஸ்டார்ட் செய்வது முதல் காரை நிறுத்துவது வரை அனைத்தும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் கார்களை ஸ்மார்ட்போன்கள் மூலமே இயக்கலாம். அந்த அளவிற்கு தற்போது அறிமுகப்படுத்தும் கார்கள் எல்லாமே கனெக்டட் கார்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
![]()
|
அவ்வாறு கனெக்டெட் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் கார்களை உரிமையாளருக்குத் தெரியாமல் காரை சீஸ் செய்வது என்பது முடியாத காரியம். அந்த உரிமையாளர் இஎம்ஐ கட்டவில்லை என்றாலும் அவரின் ஒப்புதலோடு தான் நிறுவனத்தால் சீஸ் செய்ய முடியும். இந்நிலையில், கனெக்டட் கார்களை உரிமையாளர்களுக்கே தெரியாமல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
![]()
|
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இனி வரும் ஃபோர்ட் கார்களை மாதத் தவணையில் வாங்குபவர்கள், ஏதேனும் ஒரு மாதம் செலுத்த தவறினால், கார்களை அவர்களது கணினிகள் மூலமே கட்டுக்குள் கொண்டு வந்துவிடும் வகையில் வடிவமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த ஆக.,2021ல் பேட்டன்ட்(patent) உரிமம் ஒன்றை வாங்கப்போவதாக கூறியிருந்த நிலையில், தற்போது இந்த தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்காக மட்டுமே விண்ணப்பித்துள்ளது.. இதன்மூலம் இனி மாதத் தவணை கட்டத் தவறும் உரிமையாளர்களின் கார்கள், அவர்களின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்.
தவனை கால தாமதமாகும் ஒவ்வொரு முறையும் ஒரு ஒரு அம்சங்களாக துண்டிக்கப்பட்டுவிடுமாம். அதற்கு முதலில் கார்களை தயாரிக்கும் பொழுது அந்த கார்களின் ஒவ்வொறு கட்டுப்பாடுகளும் ஆன்லைன் மூலமாக இயக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கார் தன்னைத் தானே ஜியோ ஃபென்சிங் (geo fencing) செய்து கொண்டு, குறிப்பிட்ட தூரத்தைத் தாண்டிச் செல்லாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி கார் வாங்கினால் இதற்கான அதிகாரம் பைனான்ஸ் நிறுவனத்திடமும் இருக்கும்.
முதலில் இந்த தொழில்நுட்பம் மூலம் உரிமையாளர்களுக்கு நினைவூட்டல் செய்தி ஒன்றை அனுப்பி அதையும் பார்க்க தவறினால் முதல் கட்டமாக க்ரூஸ் கண்ட்ரோல், ஜிபிஎஸ், ஏசி, ரேடியோ போன்ற வசதிகளை நிறுத்தப்படும். இரண்டாவதாக இயக்கும்பொழுது ஒரு வகை துர்நாற்றத்தை கார் வெளியிடுமாம். காரின் டோர்கள், என்ஜின் ஆஃப்/ஆன் கண்ட்ரோல் லாக் செய்யப்படும். இதனைக் கடந்தும் தவனை செலுத்தப்படவில்லை என்றால் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கார் தானாக புறப்பட்டு, வாங்கிய டீலரின் இடத்திற்கு சென்று விடுமாம்.
![]()
|
இந்த தொழில்நுட்பத்திற்காக, ஃபோர்ட் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 1342 பேட்டன்ட்களை பதிவு செய்துள்ளது என்று அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். அதாவது, ஒரு நாளைக்கு மூன்றுக்கும் மேற்பட்ட பேட்டன்ட்களைப் பதிவு செய்து அதற்கு ஒப்புதல் பெற்றுள்ளது. எனவே இந்த செமி அட்டானமஸ் டிரைவிங் மோட் கொண்ட கார் மாடல்களுக்கும் கூடிய விரைவில் உரிமம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரின் உரிமையாளர் இஎம்ஐ செலுத்தவில்லை என்றால் பைனான்ஸ் நிறுவனத்தால் காரை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். ஆனால் இந்த மாதிரியான தொழில்நுட்பத்தை காருக்கு கொண்டு வர முடிவு செய்யவில்லை காப்புரிமைக்காக சில தொழில்நுட்பங்களை பதிவு செய்வது வழக்கம் என ஃபோர்டு நிறுவனம் விளக்கமளித்துள்ளது