பெ.நா.பாளையம்:உலக மகளிர் தினத்தையொட்டி பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கே.எம்.சி.எச்., மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆகியன இணைந்து, சர்வதேச மகளிர் தினமான நாளை பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், 30 வயதிற்கும் மேற்பட்ட பெண்களுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இ.சி.ஜி., ஆகிய பரிசோதனைகள், மார்பக ஊடு கதிர் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஆகியவற்றை இலவசமாக மேற்கொள்கிறது. பரிசோதனை செய்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள என்.சி.டி., புற நோயாளிகள் பிரிவில் ஆதார் எண், முழு விலாசம், மொபைல் போன் எண்ணுடன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகவலை பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் தெரிவித்தார்.