திண்டிவனம் : திண்டிவனம் புனித அன்னாள் கலைக் கல்லுாரியில் ஆராய்ச்சி முறை பகுப்பாய்வு பயிலரங்கம் நடந்தது.
வணிகவியல் துறை சார்பில் நடந்த ஒரு நாள் தேசிய பயிலரங்கத்திற்கு, முதல்வர் சத்யா தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். மூன்றாமாண்டு மாணவி சாருலதா வரவேற்றார். செயலாளர் பீட்டர் பால்ராஜ் வாழ்த்திப் பேசினார்.
சிறப்பு விருந்தினர் அருண்குமார் நமச்சிவாயம், வணிகவியல் துறைத் தலைவர் சாந்தி, பேராசிரியர்கள் விஜயசாந்தி, லில்லி, லுார்துசாமி, சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவி ரேவதி நன்றி கூறினார்.