படப்பை: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்தில் சோமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. சோமங்கலம் பெரிய ஏரி --சித்தேரி இடையே உள்ள சாலையில் சிறுபாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இங்கு போதிய தடுப்பு அமைக்காமல் பணிகள் நடக்கின்றன. இந்த சாலையை கடந்து அரசு தொடக்கப்பள்ளிக்கு 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்கின்றனர். பழமையான சுந்தராஜ பெருமாள் கோவில், சோமநாதேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பலர் இந்த வழியே செல்கின்றனர்.
இந்நிலையில், பணி நடக்கும் இடத்தில் தடுப்பு இல்லாததால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால், அந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்களில் செல்வோரும் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.
நெடுஞ்சாலை துறையினர் போதிய தடுப்புகளை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.