விழுப்புரம் : விழுப்புரத்தில் கூலி பாக்கி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், வழுதரெட்டி ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் பரணிதரன், 31; அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரதீப்ராஜ், 25; பிரதாப், 23; நண்பர்கள். இவர்கள், வழுதரெட்டி சிவன் கோவிலில் மேளம் அடித்து வருகின்றனர்.
பிரதீப்ராஜ், பிரதாப் இருவரும், மேளம் அடித்த கூலித்தொகை 1,500 ரூபாய் பரணிதரனுக்கு தர வேண்டியுள்ளது.
அந்த கூலித் தொகையை தரும்படி, நேற்று முன்தினம் பரணிதரன் கேட்டுள்ளார். அதற்கு இருவரும் சேர்ந்து, பரணிதரனை திட்டி, தாக்கியுள்ளனர். புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்ராஜ், பிரதாப் ஆகியோரை கைது செய்தனர்.