நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களில் புதுப் புது தொழிலுக்கான வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டுகொண்டு அதில் தொடர்ந்து கவனத்தையும், உழைப்பையும் செலுத்தினால் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம் என்பதற்கு உதாரணம் திருப்பூரைச் சேர்ந்த சிவப்பிரியா (25).
தங்கள் குழந்தைகளை பொக்கிஷமாக நினைக்கும் பெற்றோர்கள், கர்ப்பமடைந்ததிலிருந்து அதன் வளர்ச்சியை போட்டோஷூட் செய்து காட்சிப்படுத்த துவங்கி விடுகின்றனர். இது முதல் மாத பிறந்த நாள் முதல் மூன்றாவது பிறந்த நாள் வரை தொடர்கிறது. போட்டோசூட்டின் போது குழந்தையை இன்னும் க்யூட்டாக காட்ட நிறைய ஆக்சசரிஸ் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று தான் ‛புளோரல் பேண்ட்' எனும் தலையில் அணியும் அலங்கார பொருள். இது இப்போது ரொம்பவே டிரெண்ட். இதனை ஹாபியாக செய்ய ஆரம்பித்து, தொழில்முனைவோராக மாறி, இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த சிவப்பிரியா.
![]()
|
பியோதெரபிஸ்ட்டான இவர், லாக்டவுனில் பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்து இதனை முழு நேர தொழிலாக்கி வெற்றிநடை போடுகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...
சிறு வயதில் கிராப்ட் வேலைப்பாடுகளில் ஆர்வம் இருந்ததால் என்னோட கிரியேட்டிவிட்டியையும் இதில் சேர்த்துக்கிட்டேன். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ். ஒரு நாளைக்கு 20 ஆடர்ஸ் வரை வரும். குழந்தைகள் பர்த்டே டிரஸ் முன்னாடியே அனுப்பி விட்டு இந்த காம்பினேசன்ல வேணும்னு கேட்பாங்க. பிறந்த குழுந்தைளுக்கான அத்தனை அணிகலன்களும் கிடைக்கும். பெண்களுக்கான ஹேர் பேண்ட், ேஹர் கிலிப், அணுகலன்கள், சிலிங் பேக், ஹேண்ட் பேக்கும் செய்வேன்.
![]()
|
![]()
|
![]()
|
வீட்டிலிருக்கும் பெண்களை, 'ஹவுஸ் ஒய்ப்'னு சொல்ற காலம் மலையேறிவிட்டது. அதையும் தாண்டி, பிடிச்ச விசயத்தை பேஷனாக்கி, அதில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்க ஒவ்வொரு பெண்ணும் நினைக்கனும்' என்கிறார்.