காபூல்:ஆப்கனில், விவாகரத்துக்கு செய்யப்பட்ட பெண்களை, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழும்படி தலிபான் அமைப்பினர் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, 2021ல் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு, விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் பலர், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில், அவ்வாறு பாதிக்கப்பட்ட 40 வயதான பெண் ஒருவர், தன் எட்டு குழந்தைகளுடன் பரிதவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரவாதிகளிடமிருந்து அமெரிக்கப் படையினர் ஆப்கனை மீட்டபோது, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். எனினும் தலிபான் ஆட்சிக்கு வந்தபின், பெண்கள் கடும் துயரங்களுக்கு உள்ளாகினர்.
குறிப்பாக, விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை, முன்னாள் கணவருடன் சேர்ந்து வாழும்படி தலிபான் ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு கட்டாயப்படுத்தி வாழ்ந்த பெண்களை, பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதுடன், பற்களை உடைத்தும் காயப்படுத்தி உள்ளனர்.
இதேபோல் பாதிக்கப்படும் பெண்கள், நீதிமன்றங்களை நாடினாலும், நீதி மறுக்கப்படுவதாகவும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என ஆணாதிக்கம் நிறைந்ததாகவே ஆப்கன் இருப்பதாகவும் பெண்கள் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement