இன்று மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம். இதனை முன்னிட்டு உலகின் பல நாடுகளின் பெண்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்களுக்கெதிரான வன்முறை தடுப்பு, பெண்களின் ஆரோக்கிய பிரச்னைகள், பெண் கல்வி, வேலைவாய்ப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த தினத்தில் வலியுறுத்தப்படுகின்றன. குறிப்பாக பெண்களின் ஆரோக்கிய பிரச்னைகள் குறித்து மருத்துவர்கள் இந்த தினத்தில் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துவர்.
![]()
|
பெண்களின் உடல் பிரச்னைகளில் முக்கியப் பிரச்னையாகக் கருதப்படுவது தண்டுவட வலி மற்றும் டிஸ்க் கோளாறு. 40 வயதைக் கடந்த மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் பலருக்கு எலும்பு அடர்த்தி குறைவதால் இந்த பிரச்னை உண்டாகிறது. சிற்சில உடற்பயிற்சிகள் மூலமாக தண்டுவடத்தை வலுவாக்கி இந்த பிரச்னையில் இருந்த தப்பிக்கலாம். அவை என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?
![]()
|
அலுவலகங்களில் பலமணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்க்கும் பெண்களாக இருந்தாலும், கட்டட வேலை செய்யும் பெண் தொழிலாளியாக இருந்தாலும், பெண் விளையாட்டு வீராங்கனையாக இருந்தாலும் முதுகுத் தண்டுவட டிஸ்க் வீக்கம், தேய்மானம் அல்லது பிடிப்பு ஏற்படும். தொடர்ந்து முதுகுத் தண்டு அசைந்தாலும், வளைந்தாலும் அல்லது அசையாமல் ஒரே இடத்தில் இருந்தாலும் பெண்களுக்கு ஒரு வயதில் இந்த பிரச்னை ஏற்படுவதை மறுப்பதற்கில்லை.
![]()
|
இந்த தண்டுவட அழுத்தத்துக்கு 'ஸ்பைனல் டீகம்ப்ரஷன்' எனப் பெயர். இதனை சரிசெய்ய அவ்வப்போது தண்டுவட எலும்பு அடுக்குகளுக்கு இடைவெளி கொடுக்க வேண்டும். இதற்கு சிறிய பயிற்சிகளே போதுமானவை. சோம்பல் முறிக்கும்போது இரண்டு கைகளையும் மேலே செங்குத்தாக நீட்டி இணைத்து உடலை ஸ்ட்ரெச் செய்வோம் அல்லவா? இதுகூட தண்டுவட டிஸ்குகள் ரிலாக்ஸ் ஆக உதவும்.
காலை உறங்கி எழுந்ததும் தரையில் மேட் விரித்து அதில் நின்று சிறு ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். தினமும் ஜிம் செல்லும் பெண்கள் ஸ்குவாட் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். இதனால் கீழ் முதுகுத் தசைகள் பலப்படும்.
![]()
|
இதுதவிர தண்ணீர் குடங்களை இடையில் தூக்கி வருவது, கோலம் போடுவது, குக்கர் இறக்கி வைப்பது, தரையை மொழுகுவது உள்ளிட்ட பல அன்றாட செயல்கள்கூட மறைமுகமாக தண்டுவட ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கின்றன. எனவே இல்லத்தரசிகளுக்கு இயற்கையாகவே இதுபோன்ற உடற்பயிற்சிகள் தங்களது அன்றாட வேலைகள் மூலம் கிடைக்கப்பெறுவது குறிப்பிடத்தக்கது.