குரோம்பேட்டை:தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம், இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் அமுலு, 59; மீன் வியாபாரி. இவருக்கு இரண்டு மகன்கள். ஆட்டோ ஓட்டுனரான மூத்த மகன் மணிகண்டன், 38, சில ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்றதால், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இவர், , வீட்டில் இருந்த தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அமுலு பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டினார்.
சிட்லப்பாக்கம் போலீசார், தாயை வெட்டிய மணிகண்டனை கைது செய்தனர்.