கோவை:மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், 'ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி., கிளப்' அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'யூனிவர்சல் ஹீட் எக்சேஞ்ச் கோப்பைக்கான' இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இதில், 'ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி.,' மற்றும் ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த ரெயின்போ அணியினர், 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தனர். ரங்கநாதன் (44*) சேர்த்தார்.
அடுத்து விளையாடிய சக்தி கல்லுாரி அணியினர் 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அணிக்காக மணி முருகன் (40) ரன்கள் எடுத்தார். ரெயின்போ அணியின் குகன் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.