வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, என்.ஜி.ஓ., நகரைச்சேர்ந்தவர் டில்லிபாபு. இவர், தனது வீட்டின் முன்புறத்தில், மின் மோட்டார் வைண்டிங் செய்யும் கடை ஒன்று வைத்துள்ளார். நேற்று முன்தினம், கடையை பூட்டி வெளியூருக்கு சென்றுள்ளார்.
நேற்று கடை பூட்டு உடைக்கபட்டு, அதில் இருந்த, 200 கிலோ காப்பர் ஒயரை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். மேலும் சில மின் மோட்டார்கள் திருபோனதாக கூறப்படுகிறது.
இதன் மதிப்பு, 1 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என,தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, டில்லிபாபு மனைவி ேஹமலதா அளித்த புகாரின் படி, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.