ராமநாதபுரம்: பரமக்குடி மாதவன் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக்கடை மற்றும் பாரில் குடிபோதையில் மக்களிடம் பிரச்னை செய்கின்றனர். அவற்றை அகற்ற வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மனுவில் கூறியுள்ளதாவது: பரமக்குடி பஸ்- ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், வணிக வளாகங்கள் அமைந்துள்ளமாதவன் நகர் குடியிருப்பு பகுதியில் அருசு மதுக்கடை, பார், தனியார் ஏ.சி., பார் செயல்படுகிறது.
இங்கு மது அருந்திவிட்டு செல்பவர்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே அவற்றை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ேஷக் அப்துல்லா, மாவட்ட செயலாளர்கள் சிந்தா ேஷக்மதார், முகமது இலியாஸ், நிர்வாகிகள் பங்கேற்றனர்.