புதுடில்லி:'அதானி எண்டர்பிரைசஸ்' நிறுவனம், குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்படுவதாக, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவை தெரிவித்துள்ளன.
இந்த முடிவு, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், அதானி குழுமத்தை சேர்ந்த 'அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமென்ட்' ஆகிய மூன்று நிறுவனங்களை, குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டுவருவதாக அறிவித்திருந்தன.
இதன்பிறகு, கடந்த பிப்ரவரி 13ம் தேதியன்று, அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகிய நிறுவனங்கள் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.