சிவகங்கை: சிவகங்கையில் வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் 6 கட்டங்களாக 30 மாவட்டங்களில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழரசி எம்.எல்.ஏ., பங்கேற்றனர்.அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் விவசாயத்திற்கு என தனியாக பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதன் படி பட்ஜெட் திட்டமிடப்படுகிறது.
6 பகுதியாக 30 மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
2253 விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இது வரை முரண்பாடான கருத்துக்களை விவசாயிகள் தெரிவிக்கவில்லை.
கடந்தாண்டு கேட்கப்பட்ட கருத்துக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டும் திட்டத்தில் 3 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏரிகள், கண்மாய்கள் துார் வார வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக
உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் குண்டு மிளகாய் பாதுகாப்புக்கு குளிர்பதன கிடங்குகேட்டுள்ளனர். இந்தாண்டு விவசாயிகளுக்கு சாதகமான பட்ஜெட்டாக இருக்கும், என்றார்.