சென்னை:சென்னை கோட்டத்தில் எட்டு ரயில் நிலையங்களில், தலா இரண்டு வாகன சார்ஜிங் மையங்கள் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பயணியர் வருகை அதிகமாக இருக்கும் முக்கிய ரயில் நிலையங்களில் பைக், கார் பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜிங் மையங்கள் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதன்படி, முதல்கட்டமாக 28 ரயில் நிலையங்களில் சார்ஜிங் மையங்களை அமைக்கப்படுகின்றன.
பரங்கிமலை, சைதாப்பேட்டை, பேசின்பிரிட்ஜ், அம்பத்துார், திருத்தணி, கலங்கரை விளக்கம், மந்தவெளி, கோட்டூபுரம் ஆகிய எட்டு ரயில் நிலையங்களில் தலா இரண்டு சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை, பயணியரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.