அவலுார்பேட்டை, : மேல்மலையனுாரில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கி தாய்மார்களிடம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
பி.டி.ஓ., சிலம்புச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், கலா நாராயணமூர்த்தி, குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் சவுமியா உட்பட பலர் பங்கேற்றனர்.