மயிலம் : பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணினி பேரவை விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் பிரபலா ஜெ ராஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய், பவ்டா துணைத் தலைவர் அல்பினா ஜோஸ், பவ்டா கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரி கணினி துறை பேராசிரியர் பரணிகுமார் 'கணிதத்தில் மர்மம்' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேலும் இன்றைய காலத்தில் வேலை வாய்ப்புகள் பெறுவது எப்படி என்பது குறித்தும் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
கல்லுாரி துணை முதல்வர் சேகர், கணிதத் துறைத் தலைவர் சற்குருநாதன் வாழ்த்திப் பேசினர்.
கல்லுாரி உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.