சங்கராபுரம் : சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நியூபவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.பள்ளி தாளாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். நிறுவனர் பெரியசாமி, தலைவர் பழனியம்மாள், பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, துணை சேர்மன் ஜானகி, டாக்டர் ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி முதல்வர் ஜெயந்தி மார்டின் வரவேற்றார்.
பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
பள்ளி முதல்வர் சுசிலா நன்றி கூறினார்.