நம் ஊரின் வரலாற்றுத் தலங்கள்..!

Updated : மார் 08, 2023 | Added : மார் 08, 2023 | |
Advertisement
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரும் ஒரு வரலாறை சொல்லும். அந்த வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களின் பட்டியல்கள் இதோ... சிறந்த சுற்றுலாத் தலங்கள் என்பதையும் தாண்டி இவை நம் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் உணர்த்துகின்றன. உங்கள் டிராவல் லிஸ்டில் இவை உள்ளனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.கன்னியாகுமரி நம் நாட்டின் தென்முனையாக கன்னியாகுமரி
Historical places of Tamil..!  நம் ஊரின் வரலாற்றுத் தலங்கள்..!

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரும் ஒரு வரலாறை சொல்லும். அந்த வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களின் பட்டியல்கள் இதோ... சிறந்த சுற்றுலாத் தலங்கள் என்பதையும் தாண்டி இவை நம் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் உணர்த்துகின்றன. உங்கள் டிராவல் லிஸ்டில் இவை உள்ளனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.



கன்னியாகுமரி



latest tamil news

நம் நாட்டின் தென்முனையாக கன்னியாகுமரி அமைந்துள்ளது. உலகுக்கு பொதுமறை வழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்த ஐயன் திருவள்ளுவர் சிலை, முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் 133 அடி உயரத்தில் கம்பீரமாக இங்கு வீற்றிருக்கிறது. இதன் அருகிலேயே சுவாமி விவேகானந்தர் பாறை மற்றும் நினைவு மண்டபம் அமைந்துள்ளது.


மேலும், வட்டக்கோட்டை, உதயகிரி கோட்டை, சித்தாறல் மலைக்கோவில், ஜெயின் நினைவுச் சின்னங்கள், திருநந்தக்கரை குகைக்கோவில், குமரி கடற்கரை, காந்தி மண்டபம், தொட்டிப் பாலம் சுசீந்திரம் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனை போன்ற ஏராளமான சுற்றுலா தலங்கள் இப்பகுதியில் உள்ளன.



தஞ்சாவூர்



latest tamil news

Advertisement

சோழர் தம் பெருமையை, காவேரி செழிக்கும் தஞ்சையில் காணலாம். பார்க்க சலிக்காத பெரிய கோயில், கரிகாலன் பெயர் சொல்லும் கல்லணை, பிற்கால வரலாறை சொல்லும் சரபோஜி மஹால், சரஸ்வதி மஹால் இங்கு அமைந்துள்ளன. தஞ்சையை சுற்றி திருவையாறு, தாராசுரம், பட்டீஸ்வரம், கும்பகோணம், பழையாறு, கங்கை கொண்ட சோழபுரம், ஸ்ரீரங்கம், திருச்சி உள்ளிட்ட இடங்களையும் கண்டு களிக்கலாம்.



கண்ணகி பிறந்த பூம்புகார்



latest tamil news

சங்க காலத்தில் சோழர்களின் முக்கிய துறைமுகமாக இருந்தது காவேரிப்பூம்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பூம்புகார். கண்ணகி பிறந்த இடமான இதைப் பற்றி சிலப்பதிகாரம் விவரிக்கிறது. சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம், மாசிலாமணி நாதர் கோயில், கடற்கரை ஆகியவை இங்கு அவசியமாக பார்க்க வேண்டியவை. இதன் அருகில் தான் பல சுற்றுலா இடங்கள் கொண்ட தரங்கம்பாடி நாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் அமைந்துள்ளன.



பழமையைக் காக்கும் புதுச்சேரி



latest tamil news

பிரெஞ்சு அடையாளங்களை கொண்டுள்ள புதுச்சேரி, பழந்தமிழர் நாகரிகம் செழித்திருந்த இடங்களில் ஒன்று. புதுச்சேரியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது அரிக்கமேடு. இங்கு நடந்த அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ரோமானிய கால வணிக முறைகள், தமிழர் கடல் கலந்த வணிகம் செய்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. புதுச்சேரியில் பிரான்ஸ் போர் நினைவிடம், பாரதி அருங்காட்சியகம், பொட்டானிகல் கார்டன், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் ஆகியவை காணத் தகுந்தவை.



கலைக்கூடம் மகாபலிபுரம்



latest tamil news

கல்லில் கலைவண்ணம் படைத்து, சிற்பங்களுக்கு மரணமில்லா வாழ்வளித்த பல்லவர்களின் பெருமையை பறைசாற்றுகிறது மாமல்லபுரம். சோழர்களுக்கு முன்பே கற்கோவில்கள் எழுப்பியவர்கள் பல்லவர்கள். கடற்கரை கோயில், ஒற்றைக்கல் குடல்வரைக் கோயில்கள், சிற்பங்கள், காண்போரை வியக்க வைக்கின்றன. பல்லவர்களின் தலைநகராக இருந்த காஞ்சிபுரத்திலும் அவர்களின் கட்டடக்கலைகளைக் காணலாம். கோவளம், முட்டுக்காடு, புதுச்சேரி, சென்னை என சுற்றிப் பார்க்கக் கூடிய இடங்கள் அருகில் பல உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X