திருவள்ளூர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் மகளில் தின விழா கொண்டாடப்பட்டது.
பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் கிராமத்தில், ஊராட்சி தலைவர் தில்லைகுமார் தலைமையில் மகளிர் தின விழா நடந்தது. ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்தியில் மகளிர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
உலக மகளிர் தின விழாவையொட்டி, திருத்தணி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
வெங்கத்துார் ஊராட்சி, மணவாள நகரில் உள்ளது அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொ. அமுதா மற்றும் சக ஆசிரியர்கள் மாணவியருடன் 'கேக்' வெட்டி கொண்டினர்.
பின், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், திருத்தணி போலீசார் சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா வரவேற்றார். இதில், திருத்தணி போலீஸ் நிலைய சட்டம்- - ஒழுங்கு எஸ்.ஐ., ராக்கிகுமாரி, பயிற்சி எஸ்.ஐ.,வினோத் மற்றும் பெண் போலீசார் பள்ளியில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியருக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகள் வழங்கி மகளிர் தின விழா கொண்டாடினர்.
திருத்தணி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண்களை கவுரவிக்கும் வகையில் திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை முன்னிலையில் மகளிர் தின விழா கொண்டாடினர்.
கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை சார்பில், நடந்த விழாவில், மருத்துவர்கள் கென்னடி, அம்சவாஹினி, யாமினி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். கும்மிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பெண்களுக்கான மருத்துவ முகாம்களை துவக்கி வைத்தார்.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் கண்ணன் தலைமையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
- நமது நிருபர் குழு -