செய்யூர்:செய்யூர் அருகே வடக்கு செய்யூர் கிராமத்தில், நாராயணன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில், நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மின் மோட்டாரை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து, செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து, மின் மோட்டார் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் 22; கார்த்திக் 20; ஆகிய இருவரும், மின் மோட்டாரை திருடி சென்றது தெரியவந்தது.
அதையடுத்து, செய்யூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.