டிஸ்னி + ஹாட்ஸ்டார் - ஹெச்பிஓ ஒப்பந்தம் முடிவு; கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் கலக்கம்!

Updated : மார் 08, 2023 | Added : மார் 08, 2023 | |
Advertisement
டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடி தளத்தில் இருக்கும் ஹெச்பிஓ (HBO) நிறுவனத்தின் நிகழ்ச்சிகள், இம்மாத இறுதியில் இருந்து ஓடிடியில் கிடைக்காது என ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மாதிரியான கன்டென்டுகளை ஸ்ட்ரீம் செய்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் பிரபல தொலைக்காட்சி நெட்வார்க்கான
HBO content leaves Disney+ Hotstar from March 31டிஸ்னி + ஹாட்ஸ்டார் - ஹெச்பிஓ ஒப்பந்தம் முடிவு; கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் கலக்கம்!

டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடி தளத்தில் இருக்கும் ஹெச்பிஓ (HBO) நிறுவனத்தின் நிகழ்ச்சிகள், இம்மாத இறுதியில் இருந்து ஓடிடியில் கிடைக்காது என ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மாதிரியான கன்டென்டுகளை ஸ்ட்ரீம் செய்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் பிரபல தொலைக்காட்சி நெட்வார்க்கான ஹெச்பிஓ உடன் ஒப்பந்தம் வைத்திருந்தது. இந்நிலையில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இருக்கும் ஹெச்பிஓ (HBO) நிறுவனத்தின் நிகழ்ச்சிகள், இம்மாத இறுதியில் இருந்து ஓடிடியில் கிடைக்காது என ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.latest tamil news


ஹெச்பிஓ நிகழ்ச்சிகள் மற்றும் படங்களுக்கான ரசிகர்கள் ஏராளம். ஏனென்றால் ஹெச்பிஓ நிறுவனத்தின், கேம் ஆஃப் த்ரோன்ஸ்(GOT) ஹவுஸ் ஆஃப் தி டிராகன் (House of the Dragon) மற்றும் சமீபத்தில் வெளியான லாஸ் ஆஃப் அஸ்(Last of Us) உள்ளிட்ட புகழ்பெற்ற வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்கள் படையே உள்ளது. எனவே பயனர்கள் ஹாட்ஸ்டாரில் சந்தா செலுத்தி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதுண்டு. இதில், ஓடிடி மற்றும் தொலைக்காட்சி/தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் குறிப்பிட்ட காலகட்டத்திற்குதான் போடப்பட்டிருக்கும். அவர்களின் ஒப்பந்தம் காலவதியாகும்போது, அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பார்கள்.latest tamil news


இதுவரை டிஸ்னி + ஹாட்ஸ்டார் - ஹெச்பிஓ நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் புதிப்பிக்கப்படாததால், இனி ஹெச்பிஓ நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் கிடைக்காது என கூறப்படுகிறது. அதாவது, வரும் மார்ச் 31ம் தேதியில் இருந்து உலக புகழ்பெற்ற வெப்-சீரிஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ், லாஸ் ஆஃப் அஸ், போன்ற தொடர்களை இந்திய வாடிக்கையாளர்கள் இனி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காண முடியாது.latest tamil news


இதனால், ஹெச்பிஓ ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆனால் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் கலெக்ஷன்ஸில், 10 மொழிகளில், 1,00,000 மணிநேரத்திற்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை நீங்கள் கண்டு களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X