கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக்கல்லுாரியில் சர்வதேச மகளிர் தின விழா, நடந்தது.
கல்லுாரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். கணிதத்துறை தலைவர் மீனா வரவேற்றார். சிதம்பரம் அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் பத்மா, பெண்களின் பாதுகாப்பு குறித்து, விளக்கி, பேசினார்.
தமிழ்சேனை முத்தமிழ் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஷாமினி, மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம்,வாழ்க்கை குறித்து பேசினர்.விழாவில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.உதவி பேராசிரியர் டார்லின்குயின், நன்றி கூறினார்.முடிவில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நடந்தது.