உடுமலை : உடுமலை பகுதி தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்திகளை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம், போலீசார் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை பகுதிகளிலுள்ள, நுால்மில்கள், இயந்திர தொழிற்சாலைகள், காற்றாலை நிறுவனங்கள், கோழிப்பண்ணகைள் என ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கோட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார், அங்கு, பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களிடம், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்படுகிறது; உரிய பாதுகாப்பு வழங்கப்படும். குறைகள் இருந்தால், அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம், என அறிவுறுத்தினார்.