சென்னை:இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், கோடை விடுமுறையை ஒட்டி, குஜராத், அசாம், உ.பி., பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள புனித தலங்களுக்கு செல்ல, விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஏப்., 8ம் தேதி, விமானத்தில் புறப்பட்டு, குஜராத் மாநிலத்தில் பட்டேல் சிலை, மகாதேவ் கோவில், ஜோதிர்லிங்க கோவில் ஆகிய இடங்களை சுற்றி பார்த்து திரும்பலாம்; எட்டு நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு, 40 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம்
சென்னையில் இருந்து ஏப்., 14ம் தேதி விமானத்தில் புறப்பட்டு, உ.பி., மாநிலம் அயோத்தி, வாரணாசி, கயா, அலகாபாத் ஆகிய இடங்களை சுற்றி பார்க்கலாம். ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு 36 ஆயிரம் ரூபாய் கட்டணம்
சென்னையில் இருந்து, ஏப்., 26ம் தேதி விமானத்தில் புறப்பட்டு, அசாம் மாநிலம் ஷில்லாங், சிரபுஞ்சி, காமாக்யா, கவுஹாத்தி ஆகிய இடங்களை காணலாம். 7 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு 45 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம்.
விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, நட்சத்திர விடுதியில் தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவை இதில் அடங்கும்.
மேலும், தகவல் பெற 90031 40682, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.