திருப்பூர் : திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் அனிதா ரேச்சல் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் பேசினார்.
ஐ.ஐ.ஜி.எம்., நிறுவன திருப்பூர் ஒருங்கிணைப்பாளர் செல்வி பேசியதாவது:
வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளும் பெண்கள், சாதனையாளராக மாறுகின்றனர். பணியிடங்களில் பெண்களையும் ஆண்களையும் சரி சமமாக நடத்த வேண்டும். அனைத்து ஆண், பெண் தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைஉறுதி செய்யவேண்டும்.
பெண்கள் முயற்சித்தால், சிறந்த தொழில்முனைவோராக மாறமுடியும். பணிபுரியும் பெண்கள், கிடைக்கும் வருவாயில், 60 சதவீதத்தை சேமிக்க வேண்டும்; வீண் செலவினங்களை கண்டறிந்து கட்டுப்படுத்தவேண்டும். இலக்கை நோக்கி பயணிக்கும்போது, பல்வேறு தடைகள் உருவாகும்; சோர்ந்து உட்கார்ந்துவிடக்கூடாது. தடைகளை தகர்த்தெறிந்துவிட்டு, துணிச்சலுடன் பயணிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.