மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, குடைவரைகள் என, பல்லவர் நினைவுச் சின்னங்கள் உள்ளன.
மத்திய தொல்லியல் துறை இச்சிற்ப வளாகத்தை பராமரித்து பாதுகாக்கிறது.
நுழைவுக் கட்டணமாக, இந்தியரிடம் தலா 40 ரூபாய், சர்வதேச பயணியரிடம் தலா 600 ரூபாய் என வசூலிக்கிறது.
உலக பாரம்பரிய வார துவக்க நாளான, நவ., 19 மற்றும் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 ஆகிய நாட்களில், பயணியரை இலவசமாக அனுமதிக்கிறது.
நேற்று, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, பயணியரை இலவசமாக அனுமதித்தது. பயணியர் மகிழ்ச்சியுடன் சிற்பங்களை கண்டு ரசித்தனர். சர்வதேச குழு பயணியர், இலவச அனுமதியை வரவேற்பதாக, மகிழ்ச்சி தெரிவித்தனர்.