கள்ளக்குறிச்சி: மகாகவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா நேற்று நடந்தது.
சின்னசேலம் அடுத்த ராயப்பனுாரில் உள்ள மகாகவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவிற்கு, கல்வி நிறுவன இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் உமா முன்னிலை வகித்தார். ஆசிரியை சுதா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மகளிர் தினத்தையொட்டி பெண் உரிமைகள், பெண் பெருமைகள், பெண் ஒரு போராளி, பெண்களின் சமுதாய பொறுப்புகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
தொடர்ந்து, நடனம், லக்கி சேர், பாட்டுக்குபாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியை அருளரசி நன்றி கூறினார்.