உத்திரமேரூர் : வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், உத்திரமேரூரில் விவசாயிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
உத்திரமேரூர் வட்டார வேளாண் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, அட்மா திட்ட தலைவர் ருத்ரகோட்டி தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் பங்கேற்று, வேளாண்மை- உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டம் குறித்தும், அத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கிடைக்கும் கிசான் மேளா எனும் அனைத்து கடன் உதவி குறித்தும் விளக்கி பேசினார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில், லோன் மேளா திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட உழவர் பயிற்சி மைய வேளாண்மை துணை இயக்குனர் சிவபெருமான், காய்கறி சாகுபடி முறைகள் மற்றும் மண் வளம் காத்தல் போன்ற தலைப்புகளின் கீழ், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
உத்திரமேரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முகுந்தன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் லதா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.