திருநெல்வேலி:திருநெல்வேலியை சேர்ந்தவர் இரேனி 20; கல்லூரி மாணவி. 2018 பிப்.,14ல் ரூ .13 ஆயிரத்திற்கு அலைபேசி வாங்கினார்.
அதில் குறைபாடுகள் இருந்தன. சரி செய்து தரக் கேட்டார். நிறுவனத்தினர் மறுத்தனர்.
இரேனி திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர் பிரம்மா ஆஜரானார். நீதிபதி கிளாஸ்டோன் பிளஸ்ட் தாகூர் , உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், அலைபேசி நிறுவனம் பழைய அலைபேசியை திரும்ப பெற்றுக் கொண்டு புதிய அலைபேசி வழங்க வேண்டும் அல்லது அதற்குரிய தொகை 13 ஆயிரம் ரூபாய் மற்றும் வாங்கிய நாள் முதல் இதுவரை 6 சதவீத வட்டியுடன் தர வேண்டும். மேலும் மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் வழக்கு செலவுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டனர்.