சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகர்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வெறிப்பிடித்த கழுதை ஒன்று அப்பகுதியில் வருவோர் போவோரை விரட்டிக் கடித்து வருகிறது. இதுவரை 5பேர் காயமடைந்துள்ளனர்.
சாயல்குடி நகர் பகுதிகளில் காலை, மாலையில் ஏராளமான நாய்கள் கூட்டமாக திரிகின்றன. இத்துடன் தற்போது 5 வயதான ஆண் கழுதை ஒன்று தெருவில் நடந்து சென்ற 5 ஆண்களை விரட்டிக்கடித்து காலால் உதைத்துஉள்ளது.
காயமடைந்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
ஆட்டோ டிரைவர் முகம்மது ரபீக் கூறியதாவது; சாயல்குடியில் சுற்றித்திரியும் வெறிபிடித்த கழுதையால் பொதுமக்கள் பஜாரில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். கழுதையை பிடித்து சிகிச்சையளிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.