முதியவர் தற்கொலை
விருதுநகர்: விருதுநகர் உள்தெரு பகுதியில் வசிப்பவர் மீனாட்சி சுந்தரம் 66, மதுவுக்கு அடிமையானவர். நெஞ்சு வலிக்கு சிகிச்சை எடுத்து வந்தார். மார்ச் 6 இரவு மது குடித்து நெஞ்சு வலி ஏற்பட்டது. மகன் சங்கர் கணேஷ் 36, மருத்துவ மனைக்கு அழைத்த போது காலையில் செல்லலாம் என்றவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜோதிடர் பலி
விருதுநகர்: காரியாபட்டி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜோதிடர் போஸ் 70, விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் யாசகம் எடுத்து வந்தார். அண்ணாத்துரை சிலை அருகே மார்ச் 6ல் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். அரசு மருத்துவ மனையில் பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சாத்துார்: சாத்துார் மேட்ட மலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் குணசேகரன், 23. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மன விரக்தியில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.