ராமநாதபுரம்--ராமநாதபுரம் சந்தைக்கு சீசனை முன்னிட்டு, வெளியூர்களிலிருந்து புளி வரத்து துவங்கியுள்ளது. இருப்பினும் வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.120 வரை விற்கிறது.
சீசனை முன்னிட்டு, ராமநாதபுரம், நயினார்கோவில், பரமக்குடி பகுதிகளில் புளிமரங்களில் காய்ப்பு துவங்கியுள்ளது. இதேப்போல சந்தைக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில்இருந்து புளி விற்பனை வருகிறது.
இருப்பினும் கடந்த ஆண்டை காட்டிலும் வரத்து குறைவாக உள்ளதால் ஒரு கிலோவிற்கு ரூ.20 வரை விலை உயர்ந்துள்ளது.
தற்போது ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை தரத்திற்குஏற்ப விற்கப்படுகிறது. விலை அதிகரிப்பால் விற்பனை மந்தமாகியுள்ளது. வரும் ஏப்ரல், மே வரை சீசன் உள்ளதால் புளி விலை குறைய வாய்ப்புள்ளது, என வியாபாரிகள் கூறினர்.