திட்டக்குடி: திட்டக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் போலீசார், நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பஸ்நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களிடம் விசாரித்தனர்.
கோழியூர் மாரியம்மன் கோவிலைச்சேர்ந்த ராதாகிருஷ்ணன்,26; ஆவினங்குடி பள்ளக்காவேரியைச் சேர்ந்த கவுதமன்,20; கோழியூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கலைச்செல்வன்,21; என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement