திண்டுக்கல்-திண்டுக்கல்லில் சேவை குறைபாடு,பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது என தனியார் வங்கியால் பாதிக்கப்பட்ட பெண் நாகலட்சுமிக்கு 43, ரூ.6 லட்சத்து 5 ஆயிரம் இழப்பீடாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் ஆர்.எம் .காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணி46. 2020ல் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் செயல்படும் பந்தன் வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.6 லட்சம் கடன் வாங்கினார். அதே வங்கியில் இன்சூரன்ஸ் போட்டார். முதல் தவணையாக ரூ.15 ஆயிரம் கட்டினார்.
வங்கி நிறுவனத்தினர் சுப்பிரமணி இன்சூரன்ஸ் செலுத்திய தொகைக்கு இன்சூரன்ஸ் போடாமல் உள்ளனர்.
2021 ஜூனில் கொரோனா பாதிப்பால் சுப்பிரமணி இறந்தார்.
வங்கியில் தன் கணவர் செலுத்திய இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக சுப்பிரமணியின் மனைவி நாகலட்சுமி வங்கியை நாடினார். வங்கி தரப்பினர் அலைக்கழித்தனர்.
மன உளைச்சல் அடைந்த நாகலட்சுமி திண்டுக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பிறவிப்பெருமாள் ,வங்கிசேவை குறைபாடுக்காக ரூ.5 லட்சம், பெண்ணை மன உளைச்சலுக்கு உட்படுத்தியதற்காக ரூ.1 லட்சம், நீதிமன்ற செலவு ரூ.5 ஆயிரம் என ரூ.6லட்சத்து 5 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் வழக்கறிஞர் செந்தில் வாதாடினார்.