ஓசூர்: சூளகிரி அருகே டோரிப்பள்ளி அடுத்த புன்னாகரத்தை சேர்ந்தவர் கங்கப்பா, 45; இவருக்கும், அப்பகுதி ஸ்ரீராம், 52, தரப்பினருக்கும், கடந்த இரு ஆண்டுக்கு முன், விநாயகர் சதுர்த்தியின்போது சிலை பிரதிஷ்டை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த, 6ல் மாலை, ஸ்ரீராம் தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் கங்கப்பா வீட்டிற்குள் புகுந்து, ஜன்னலை சேதப்படுத்தி, கங்கப்பா, அவர் மனைவி அனிதா, 35, மகன் அமரேஷ், 25, மகள் மது, 15, ஆகியோரை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
கங்கப்பா புகார்படி, ஸ்ரீராம் உட்பட, 10 பேர் மீது பேரிகை போலீசார் வழக்குப்பதிந்தனர். அதேபோல், ஆஞ்சப்பா தன்னையும், பாலகிருஷ்ணன், வெங்கடம்மா ஆகியோரையும், கங்கப்பா தரப்பினர் தாக்கியதாக கொடுத்த புகார்படி, கங்கப்பா, திம்மராயப்பா, அனிதா, சிவக்குமார், மது, ஸ்ரீதர் ஆகிய, ஆறு பேர் மீது வழக்குப்பதியப்பட்டது.