கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் சென்னையில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சபரிநாத் எனவும், மற்றொருவர் சாந்தி எனவும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement